காதல்
துள்ளும் கயல்ன்ன கண்கள் பேசின
கள்ளூரும் அலர் அதரங்கள் பேசினவே
இவள் வாய்திறந்து பேசாவிடிலும்
கண்டுகொண்டேன் நான் இவள் சம்மதம்
என்மீது காதல் கொள்ள சம்மதம்