நட்புக்கு அந்தாதி..!!
யாரையும் தெரியாத
போது பழகினோம்..!!
பழகி பழகி
உயிராய் மாறினோம்..!!
மாறியப் பின்பு
உணர்வுகள் ஒன்றானது..!!
ஒன்றாக நடமாடியது
இரு உயிர்கள்..!!
உயிருக்கு ஒன்று என்றால் துடித்தோம்..!!
துடித்து நீநான்
நாம் ஆனோம்..!!
ஆன பிறகு
வெல்வோம் யாரையும்..!!
ப. பரமகுரு பச்சையப்பன்