மாடசாமி 130523
13.05. ௨௩
செழிய நல்லூர்
கிராமத்து வீதிகள்
பார்த்து வளர்ந்தவன்...
வரப்பு வாய்க்கால்கள்
சேர்த்து நடந்தவன்...
ஜிஸிஇ யில் சிரத்தை
எடுக்காமல் படித்தான்...
சிரத்தில் விஷயங்கள்
நிரப்பிக் கொண்டான்...
கொலம்பஸ் கால்
பதித்த தேசம் சென்றான்..
கற்ற பொறியியல்
பெற்ற அனுபவம் கொண்டு
அமெரிக்க தேசம் வென்றான்..
நிறுவனங்களை
வளரவிட்டு வாழ்கிறான்
வாழவிட்டு வளர்கிறான்
நண்பன் மாடசாமி...
நாம் சூரியனோடு பேசிக்
கொண்டு இருக்கையில்
அவன் உண்பான் நிலாச்சோறு..
அமெரிக்க தேசத்தில்
இவனுக்கு நல்ல பேரு...
ஃபைனட் எலிமென்ட் அனாலிஸிஸ்
மூழ்கி முத்தெடுக்கத் தெரிந்தவன்..
இன்டர்போலேஷன் டிஸ்கிரிடைஸேஷன்
ஷேப் ஃபங்ஷனில்
விசைகளை விசாரிப்பவன்..
சொகுசுக் கார்களின்
வரைபடங்களைக் கூறு போட்டு
விசைகளோடு வியாபாரம் பேசி
காற்றோடு கைகுலுக்கத் தெரிந்த
இவனிடம் புயல் சமரசம் பேச
வெள்ளைக்கொடி ஏந்தி வரும்..
சாலைகளில் இவன்
வடிக்கும் வாகனங்களுக்கு
ஆகாய வேகம் கைகூடும்..
பொறியியலில் சிவில்
படித்தவனுக்கு எல்லாம் வரும்
என்பதற்கு இவன் உதாரணம்..
எனக்கு அமெரிக்கா செல்ல
விசா கிடைத்தால்
நான் முதலில் பார்த்து
மகிழும் நண்பன்
மாடசாமியாகத்தான் இருக்கும்..
நண்பன் மாடசாமிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்..
🌷🌹😃👍👏🪷