வந்தாய் தரிசனம் தந்தாய்நீ தேவிபோல்

பொழியும் பனியினில் பூக்கள் நனைய
விழியில் கரத்தில் மொழியிதழில் பூக்கள்
வழியிலோர் தேவி வடிவினில் வந்தாய்
பொழியுது பூங்கவி தை

பொழியும் பனியினில் பூக்கள் நனைந்திட
புன்னகை மெல்லிதழில் கையினில் பூமலர்கள்
வந்தாய் தரிசனம் தந்தாய்நீ தேவிபோல்
தென்றலாய் பூங்கவி தை

மென்பனி மார்கழியில் மென்மலர் கள்நனைய
புன்னகை மெல்லிதழில் கையினில் பூமலர்கள்
தென்றலாய் தேவி தரிசனம் தந்தாய்நீ
பொன்னெழில் பூப்போல்வெண் பா
--------------------------------------------------------------------------------------------------------------------------
பயில்வோர் யாப்பின் எதுகை மோனை அழகுகளை
ஒருவிகற்ப பலவிகற்ப எழில்களை காணவும்

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-23, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே