பார்த்தாள் ஒரு பார்வை
எண்ணிய எண்ணம் மாறவில்லை
அவளை எண்ணிய வண்ணமே என் மனம்.....
அருந்திய விருந்தும் செரிக்கவில்லை
மருந்துக்காவது அவள் பருந்து பார்வை என்னை பறிக்காதா என்று ?
ஆத்தங்கரையில் கமலம் பூத்தது
அவள் பார்த்ததால்
என்னையும் சேர்த்து பார்த்திருந்தால் கோர்த்துருப்பேன் அவள் கரம்...
விம்மிய எண்ணம் பலித்தது
இரு விண்மீன் விழிகள் ஜொலித்தது என்னை கண்டு....
அமர்ந்தபடி படிப்பபை பார்த்த பிள்ளை
அவள் பார்வையில் மடிந்த பிறகும்
துடிப்பாக இருக்கிறது ....
அவள் மாய பார்வை....
என் மோக பார்வை
என் வாழ்வின் பாகமாய் ஏற்க !!!
-இந்திரா