ஐம்பதாவது திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

நேரிசை வெண்பா

அரைநூறாண் டில்வாழ்க்கை ஆண்டு முடித்தாய்
திரைத்தாண்டி சென்றாய் திரும்பும் -- கரைந்தோம்
விரைந்திங்கே மீண்டுவாரீர் வீட்டில் மகிழ்ச்சி
உரைநடத்திக் கொண்டாடு வோம்

ஆசிரியப்பா

நல்லதோ ரில்லாள் கைப்பிடித் துவாழ்ந்த
நல்துணைய துரத்தினம் விஜயாள் வையம்
வாழ்த்த ஐம்ப தாண்டு
வாழ்ந்தா ரவரின்று மகிழப் போற்றுவமே



.....

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-23, 11:29 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 86

மேலே