சிலையாயுள அருந்தேவனை செறிநாவினால் போற்றி - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கனி 3 / தேமா)
(1, 3 சீர்களில் மோனை)

நலமேயுறப் பெருமானையே நற்பூவினை வைத்தே
பலகாலமும் அவன்தாளினைப் பணிந்தேயழை நன்றே!
சிலையாயுள அருந்தேவனை செறிநாவினால் போற்றி
அலையேயுள திருமேவிய அவனூரினில் வாழ்த்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-23, 8:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே