அன்னையர் தினம்

அன்னையர் தினம்

அன்னை என்னும் அன்பு நிறைந்த பெட்டகம்
ஆலயம் இல்லாத இறைவனின் ஒரு இருப்பிடம்
இன்பங்கள் வழங்கும் இனிமையான உறைவிடம்
ஈடு ஏதும் செய்ய முடியாத உன்னதமான புகலிடம்
உண்மையின் முழு வடிவம் அருமையின் நூலகம்
ஊமையாக என்றும் இயங்கும் இன்பம் நிறை அதிசயம்
எல்லா உயிரும் தஞ்சமடைய உள்ள உயரிய காப்பகம்
ஏங்கும் இதயத்தை எப்பொழுதும் தாங்கும் தனியிடம்
ஐம்புலனையும் ஊடுருவும் உணர்ச்சிமிக்க அழகிய ரகசியம்
ஒப்பில்லாத வகையில் வாரி வாரி வழங்கும் குடிலகம்
ஓய்வின்றி உழைத்திடும் மிக வலிமையான உயிரினம்
இந்த அரிய பொக்கிஷத்தை வணங்கி இன்னாளை
அன்னையர்களுக்கு அளித்து அன்னாரை கொண்டாடுவோம்

எழுதியவர் : கே என் ராம் (12-May-23, 7:07 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : annaiyar thinam
பார்வை : 35

மேலே