வசிட்டன் இராமனுக்குக் கூறிய அறவுரை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)

என்று, பின்னு மிராமனை நோக்கிநான்
ஒன்று கூறுவ(து) உண்டுறு திப்பொருள்;
நன்று கேட்டு, கடைப்பிடி நன்கென,
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்! 6

- மந்தரை சூழ்ச்சிப் படலம்

விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

மதிப்பிற்குரிய கவின் சாரலன் முதலியோர் மேலே கூறியுள்ள இலக்கணத்திற்கு உட்பட்டு, தமிழ் உயிருக்கு நேர்’ என்ற பொருளில் ஒரு கலிவிருத்தம் எழுதுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-23, 10:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே