அன்றைய அரசாட்சி முறையும், இராமனிடம் அறிவுரையும் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)

கோளும் ஐம்பொறி யும்,குறை யப்பொருள்
நாளும் கண்டு நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ்அர சேஅர(சு); அன்னது
வாளின் மேல்வரும் மாதவம் மைந்தனே! 14

- மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-May-23, 4:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே