சாதனைகள் பல புரிந்திடு

ஓ... இளைஞனே ,
வாழ்வது மட்டும் வாழ்வில்லை
காலம் கடத்துவது பயனில்லை
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதனைகள் பல புரிந்திடு !
உன்னை உலகம் அறிந்திட
பூமியே உன்னைப் போற்றிட
சாதித்துக் காட்டு நீயும்
சோதித்துக் கொள் உன்னை !
சாதனைப் பட்டியல் போதும்
ஜாதகம் தேவையில்லை !
போதி மரத்தைத் தேடாதே
போதனைகளை உள் வாங்கு !
அன்பும் பண்பும் விழிகளாகி
நீதியும் நேர்மையும் பாதையாகி
பாசமும் நேசமும் கரங்களாகி
நடைபோடு வெற்றிப் பெற்றிடு !
பழனி குமார்
12.05.2023