நரசிங்க அவதாரம்

இதோ இந்த தூணில் உள்ளானா
ஏதோ தினம் தினம் நீபோற்றி
துதிக்கும் உந்தன் நாரணன் சொல்
என்று இரணியன் கேட்க அவன்
திருமகன் ப்ரகலாதனும் சொன்னான்
சற்றும் தயங்காது ;தந்தையே கேட்டிடுவாய்
உள்ளான் உள்ளான் எந்தை என்தந்தை
அரியவன் தூணிலும் உள்ளான் துரும்பிலும்
எங்கும் எதிலும் அண்டமெல்லாம் பரவி,
அதைக் கேட்டு மிக்கவே வெகுண்டான்
பின் ஏளனமாய் பெருநகை உதிர்த்தான்
அத்தோடு நில்லாது மூடனாய் இரணியன்
அந்த தூணை கையில் ஏந்திய கத்தியால்
சக்தியெல்லாம் கொண்டு புடைத்தான் வெகுவே
அப்போது விண்ணும் மண்ணும் அதிர்ந்து
ஆயிரம் ஆயிரம் பேரிடிகள் முழங்கும்
பேரோசை எழுந்திட அத்தூணும் இரண்டாய்ப்
பிளந்திட கண்ணைப் பறிக்கும் பேரொளி
எழுந்தது ஒளியின் ஊடே காட்சி
தந்தான் பிள்ளை பிரகலாதன் நித்தம்
வணங்கும் நாரணன் சொல்லுக்கப்பால்
விளங்கும் பரம்பொருளாய் முகம் சிங்கமாய்
உடல் மானிடனாக நரசிங்கமாய் தன்
கைகள் இரண்டால் எட்டிப் பிடித்து
இரணியனை தன் தொடையில் இருத்தி
கைகளின் நகங்களாலே அவன் இதயத்தைப்
பிளந்து அவன் ஆணவமாம் இரத்தத்தை
அத்தனையும் குடித்து துப்பி உயிரிலா
வீணன் உடலை இருத்தினான் பரந்த
தனது துடையில் மற்றவர் காட்சிக காக
அண்டம்கொள்ளும் சினம் பொங்க வானவரும்
மண்ணவரும் செய்வதறியாது திகைத்து நிற்க
ஆனால் அங்கு வாயில் நாரணன் நாமம்
ஓயாமல் ஒலிக்க கண்கள் மூடி கைகூப்பி
நாராயணனே கதி என்று நம்பும்
குழந்தை முனி பிரகலாதன் .........








ஆனால் அவனருகே பயம் ஏதுமிலாது
பிரகலாதன் வாயில் நாரணன் நாமம்
ஏந்தி கண்களை மூடி துதித்தே......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-May-23, 11:12 pm)
பார்வை : 53

மேலே