அவள்

இனியவளாய் இன்முகத்தாள் தேன்மொழி யாம்
தொன்மொழி தமிழில் பேசி என்மனம் கவர்ந்தாள்
புன்னகைக்கும் மலரோ இவள் என்பது போல்
தேனேந்தும் மலராய் மலர்விழியாள் காட்சிதந்தாள்
காவியம் பேசும் அவள் புன்னகைக்குள் பூட்டிக்கிடக்கும்
ஆயிரம் ஆயிரம் காதல் கவிதைகள்
அவள் அதரங்கள் மலர அவிழ
அதில் ஒன்றாய் வந்தமையும் கவிதை இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-May-23, 9:50 pm)
Tanglish : aval
பார்வை : 124

மேலே