காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 4
4. துள்ளும் இளமை
சரியாக அந்த நேரத்தில், சசசாரி சாரி திலோ ட்ராஃபிக் ல மாட்டிகிட்டேன்மா ஐ ஆம் சோ சாரி திலோ என்று பதற்றத்துடன் வந்து நின்றான் ரகுராம்.
அவன் பதற்றத்தை கண்டு புன்னகையுடன் அவனைத் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினாள் திலோ.
பார்ர்ர்ரா....... இவங்க பாசத்தை என்ற சத்தம் கேட்டு திகைத்துத் திரும்பினர் இருவரும்.
ஆர்ப்பாட்டமாக எல்லோரும் கத்தி கூச்சல் இடவும் இயல்பாக முகம் ரத்த நிறமாக சிவக்க வெட்கத்துடன் தலை குனிந்தாள் திலோத்தமா.
அவள் முகத்தின் வெட்க சிவப்பில் தன் மனதை பறி கொடுத்தவனாக முகம் நிறைய அகல சிரிப்புடன் ரகுராம் நின்றிருந்தான்.
அதைப்பார்த்த உடன் இன்னும் அதிகமாக விசில் பறந்தது.
ஒருவழியாக அனைவருக்கும் ரகுராமனை அறிமுகப் படுத்தினாள் திலோத்தமா.
அனைவரும் அவனை அன்புடன் வரவேற்று அவர்கள் திலோதமாவுக்கு தெரியாமல் ஆர்டர் செய்து வைத்திருந்த கேக்கை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டச் செய்தன.
வெட்கம் மேலோங்க திலோத்தமாவினால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. எவ்வளவோ மறுத்து போராடியும் அனைவரும் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
அத்துடன் விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. அனைவரும் சேர்ந்து வாங்கிய மோதிரத்தை ஒருவருக்கு ஒருவர் போட்டுவிடச் சொல்லி ஆர்ப்பரித்தனர்.
மறுத்து கூறினாலும் கேட்கப் போவதில்லை என்று தெரிந்ததும் வேறு வழியின்றி ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது திலோத்தமாவுக்கு.
ரகுராமனை தொட்டதில்லை என்று இல்லை, ஏன் கொஞ்சம் நேரம் முன்கூட அவன் பதற்றத்தை குறைக்க அவனை தொட்டு தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினாள் தான் ஆனாலும் இப்பொழுது மோதிரத்தை அணிவிக்க அருகில் சென்று அவன் கைகளைப் பிடிக்க கூச்சம் மிகுந்து குறுகுறுத்தது.
சிறு புன்னகையுடன் இயல்பாக தன் கையை இவளை நோக்கி நீட்டினான் ரகுராமன்.
தன்னை நோக்கி நீண்டிருந்த அவனுடைய ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நிற விரல்களை கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் திலோத்தமா.
அம்மா தாயே கல்யாணம் பண்ணிக்கிட்டு காலமெல்லாம் அந்தக் கைய இறுக்கி பிடிச்சுக்கோ... இப்ப இந்த மோதிரத்தை போட்டுவிடு என்று ரித்தேஷ் சத்தமாக கத்தவும் திலோத்தமா சிறு புன்னகையுடன் மெதுவாக அவன் வலது கை மோதிர விரலைப் பற்றி மோதிரத்தை அணிவித்தாள்.
அவனும் இவள் விரலைப் பற்றி மோதிரத்தை அணிவித்தான்.
ஒருவழியாக இருவரும் அனைவரிடமும் விடைபெற்று வெளியே வரும்போது மாலை நேரம் நெருங்கி சூழலே சுகந்தமாய் இருந்தது. இருவரின் மனதிலும் மகிழ்வு நிறைந்திருந்தது. மெதுவாக அவள் இடது கையைப் பற்றி தன் வலது உள்ளங்கையில் அடக்கிக் கொண்டான் ரகுராமன்.
கதகதப்பான அவன் கையின் சூடு அவளுக்கு அந்த நேரம் இதமாக இருந்தது.
அவன் விழிகளை பார்த்து ஒரு மோகன புன்னகை புரிந்தாள் அவனுடைய திலோத்தமா.
திலோ ஒரு காஃபி, என்று விட்டு ரெஸ்டாரண்ட் போகலாமா என்றான்.
ம்ஹூம் என்று தலையை ஆட்டியபடி "ஈ சி ஆர்" ரோட்ல ஒரு லாங் ரைட் போவோமா ரகு என்று கண்களால் கெஞ்சினாள்.
அவளுடைய பாவனையில் மனம் கறைந்தவன் அவள் தலையில் லேசாக அழுத்தி கண்களால் சிரித்தான்.
வா... என்றபடி சென்று பைக்கை ஸ்டார்ட் செய்து அதில் ஆக்ரமித்தபடி அவளைப் பார்த்தான், புரிந்து கொண்டு அவள் சென்று அவன் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.
அவனுடன் ஆன இந்தப் பயணம் அவள் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியை அள்ளித் தெளித்தது. அவர்களுடைய வாழ்க்கை பயணமே ஆரம்பித்து விட்டது போல் ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ஆனால் இந்தப் பயணத்தின் முடிவு முன்பே தெரிந்திருந்தால் திலோத்தமா லாங் ரைட் போவோமா என்று கேட்டிருக்க மாட்டாள்.
தொடரும்.....
பின் குறிப்பு : -
( திங்கள் மற்றும் வியாழன் என வாரம் இருமுறை இந்த தொடர் கதை பதிவேற்றப்படும். தொடர்ந்து இதேபோல் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் கவிபாரதீ.)