ஒருபெண்ணை யழகுபடுத் துவது எதுவாம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 6)
(1, 4 சீர்களில் மோனை)
ஒருபெண்ணை யழகுபடுத் துவதெதுவா
..முரத்தினிது சிந்தனைசெய் தேனின்றே;
அரிதாரம் பூசுவது மவள்முகத்தி
..லழகான புன்னகையுஞ் செய்வதிலா?
ஒருசாய லொப்பனையா மொருநேர
..முன்னதமா முளம்நிறைந்த முகமலர்ச்சி
தருகின்ற தரமுள்ள வுபசாரந்
..தங்கமென வுறவினர்க்குத் தருங்குணமே!
- வ.க.கன்னியப்பன்