ஞானம், மெய்ஞானம்
எத்தனையோ ஆராய்ச்சிகள் எத்தனையோ ஆண்டுகள்
அத்தனையும் எதற்கும் முடிவேதும் காட்டலையே
விண்வெளியில் ஆராய்ச்சி முடிவிலா ஆராய்ச்சி
கோடான கோடி விண்மீன்கள் கோள்கள்
கணக்கிலடங்கா அண்டங்கள் என்பன உள்ளன
இன்னும் இவைபோல் எத்தனை தெரியாது
இப்படி விஞானம் தேடி அலையும் ஞானம் ?
விஞானி அறியான் அறியான் ஏனெனில்
இந்த பிரக்ரிதி இறைவன் படைப்பு
அதன் எல்லை விஸ்தரிப்பு அவன்தான் அறிவான்
ஏனெனில் அவன் எல்லை ஏதும் இல்லாதவன்
இதை அறிந்து கொண்டால் மெய்ஞானம்
அதுவே என்பதும் புலப்படும்
இறைவனைத் தேடி அலைந்து அடைந்திடு
ஒருக்காலும் அவன் எல்லையைத் தேடாதே
இதுதான் நமது இதிகாசங்கள் சொல்லும் வழி