சுழலில் சிக்கிய மனசு

நித்தம் நித்தம் வானில்
உலா வரும் நிலவு
ஒரு நாள் வானில்
வரவில்லை என்றால்
என் மனம் கவலை
கொள்வதில்லை...!!

ஆனா
என் கண்மணியே
நிலவுப்போல்
நித்தம் நித்தம் வந்துப் போகும்
உன்னை காணும்
என் கண்கள்..
ஒரு நாள்
உன்னை காணவில்லை
என்றால் கலக்கம் கொண்டு
சோகத்தில் மூழ்கி
சுழலில் சிக்கிக்கொண்ட
படகுப்போல் மனம் தவிக்குது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-May-23, 6:12 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 340

மேலே