உடல் இரண்டாக உயிர் ஒன்றாக 555
***உடல் இரண்டாக உயிர் ஒன்றாக 555 ***
என்னுயிரே...
எத்தனையோ
நாட்கள் நான் தனிமையில்...
நீண்ட தூரம்
பயணித்து இருக்கிறேன்...
உன் கரம் கோர்த்து
பயணிக்கும் இந்த தூரம்...
முடிந்துவிட கூடாது
என்று தோன்றுதடி...
காலமெல்லாம் உன் கரம் கோர்த்து
நான் நடைபோட வேண்டும்...
நம் உடல் இரண்டாக
நம் உயிர் ஒன்றாக...
என் மனதில் நிறைந்த
மாசில்லா மாணிக்கமே...
மண்ணில் விழும் மழைத்துளிகள்
எல்லாம் கடலில் சேர்வதில்லை...
உன் விழி
கடலில் விழுந்த நான்...
உன் இதய கடலில்
சேர்ந்துவிட்டேன்...
நீ வகிடெடுத்து
பின்னல் போடுகையில்...
என் மனதையும் உன்
இதயத்தோடு பின்னிவிட்டாய்...
நீ முத்தமிடும் போதெல்லாம்
முந்தி கொள்கிறது...
உன் கால்
கொலுசின் சப்தங்கள்...
உன்
உடல் சிணுங்கல்களால்...
உயிர்கள் கலந்த உறவே
நாம் வாழவேண்டும்...
மண்ணில் புதையும்வரை
இணைபிரியாமல் நாம்.....
***முதல்பூ.பெ.மணி.....***