தொலையாத வார்த்தைகள் கவிஞர் இரா இரவி

தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
தொலையாத வார்த்தைகள் தமிழில் நிறைய
தொன்றுத் தொட்டு வரும் வார்த்தைகள் அவை !
தொலைந்து வருகின்றன நாளும் இன்று
தமிழில் தமிங்கிலம் தடையின்றிக் கலக்குது
தந்தையை அப்பா என அழைப்பது இல்லை
டாடி என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர் !
அன்னையை அம்மா என அழைப்பது இல்லை
மம்மி என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர் !
மம்மி என்றால் செத்த பிணம் என்று பொருள்
மடமையை அறிந்து மாற்றிக் கொள்ளுங்கள் !
தமிழில் ஒரு ஒருஎழுத்துக்கும் பொருள் உண்டு
தரணியில் பிறந்த முதல் மொழி நம் தமிழ்மொழி !
தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
தன்னிகரில்லா சிறந்த மொழி நம் தமிழ்மொழி !
சொற்களின் சுரங்கம் களஞ்சியம் நம் தமிழ்மொழி
சொக்கத்தங்கத்தைவிட மேலானது நம் தமிழ்மொழி !
வார்த்தைகளின் வற்றாத நதி தமிழ்மொழி
வளங்கள் மிக்க வனப்பு மொழி தமிழ்மொழி!
டாடி மம்மி வார்த்தைகளில் இல்லாது தொலையட்டும்
தமிழகத்தில் தமிழே எங்கும் எல்லோரிடமும் ஒலிக்கட்டும் !
தொலையாத வார்த்தைகள் வரிசையில் என்றும்
தமிழில் அம்மா அப்பா நிரந்தரமாக இருக்கட்டும் !

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (25-May-23, 1:56 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 104

மேலே