காதல்..

உன் இமை அசைவுக்கு
என் இதயம்
இடிந்து போகிறதே..

கண்கள் எனும்
கணையை தொடுத்து
என்னை வீழ்த்துகிறாளே..

முடிமுதல் அடிவரை
முழுவதும் கண்டு
பிரம்மிப்பில் நானே..

பெண்ணே
உன் சிறு சிறு
புன்னகை பேசிடும்படி
வெட்கத்தின் மொழியே..

எனக்குள் என்னை
தொலைத்து நானே
தேடும் மாயாஜால
வித்தையடி காதலே..

மிஞ்சுவதும் கெஞ்சுவதும்
காதலில் அழகுதான் என
உன்னிடமே கண்டு
கொண்டேனே..

கத்திரியிலே பூத்தவளே
உனக்கு வெயில்
என பெரிதா
தெரியப்போகிறதா என்னவளே..

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (25-May-23, 11:45 am)
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே