ஒரு விதம்..
இளைப்பாரிய நேரம்
இரவுகள் துடித்தது
இதயம் மறுத்தது
இன்பம் கழிந்ததே..
இவளாக தெரிந்தது
இப்போதும் இழந்தது
இம்சைகளும் கூடியது
இவ்வளவு மொத்தமாக..
இன்னொரு முறையும்
இன்பத்தை அனுபவிக்கிறேன்
இமையாக காத்திட
இளமையும் துடிக்கிறதே..
இறகாக மனம்
இப்படியே பறக்கிறதே
இதெல்லாம் இருக்க
இசையும் அழைக்கிறதே..
இழுத்து படி
இழிவு படுத்துகிறதே
இப்படியெல்லாம் வாழ்வதா
இடிந்தே போகிறேனே..
இறைவா முக்திக்கொடு
இன்னொரு ஜென்மா
இப்போது அனுபவித்தே
இம்மண்ணோடு கலக்கிறேன்..
ப. பரமகுரு பச்சையப்பன்