நினைக்க ஒரு தருணம்

நினைக்க ஒரு தருணம்

அன்று
ஒரு சிறு குழந்தையைப்போலாகவே பாவித்திருந்தாய் .
கதைகள் கேட்டு மனனிக்கும்
வயதை மறைத்திருந்தாய்.
அங்கிருக்கும் என் உடமைகளில் ஒன்றாகிவிட
சத்தியத்தில் உனக்கு பிடித்தமிருந்ததில்லைதான்.
யாரோ நிர்பந்தித்ததன் பெயராலேயே
என் உடனான உன் பயணம்
அந்நாட்களில் இருந்திருக்கலாம்தான்.

எல்லோரிடமிருந்து விலகி
ஒரு அறைக்குள்
நீயும் நானுமாய் என நுழைந்து
அடைப்பிட்ட நாட்கள் முதல்
என் கண்களுக்கு நீ
நிசப்ததியாய்
அசுஸ்த்ததியாகவே
காணப்பட்டிருக்கிறாய்.
தவறு என்னுடைய பாகத்திலிருந்துகூட
நடந்தேறியிருக்கலாம்தான்.
சொல்லப்போனால்
இன்றைய பக்குவமும் ஆளுமையும்
அன்று என்னிடம்
இல்லைதானே.

ஏதோ
சிறிய காரணத்திலிருந்து
தொடங்கிய தாளப்பிழை
பின்பு சந்தேக மரங்களென வளர்ந்து
அடிவானம் அதுதொடுகையில்
நாம் எங்கோ தொலைந்திருந்தோம் .
சொல்லிக்கொண்டே போக
காரணங்களும் ஏராளமாகின.
மனதால் பிரிந்துவிட்டப் பிறகு இருவரும் அகல நின்று யோசித்துப் பார்க்கிறபோது
எதுவாகத்தான் இருந்திருக்கக்கூடும்
அக்காரணங்கள் ?
என்பதே
அகப்படாமல் போயின.

உட(லி)னிருந்து தனித்து வாழுகிறேன்.
உன் நினைவுகள் மாத்திரமே
என் ஏக ஆசுவாசம்.
அன்று நீ எதுவாகவோ இருந்தாய்.

உன் மேல்
எத்தனை எத்தனை ப்ரியமிருத்தியிருக்கிறேன்.
நீ பிரிவின் உறுதியில் நின்றிருந்தவரை
உனக்கு இதெல்லாம் தெரியாதுதானே ம்

உன்னிடமிருந்தவர்களும்
நம் பிரிவையே வேண்டியிருந்தார்கள்.
சரி தவறு என
எதையும் அலசிப்பார்க்கும்
விருப்பமிழந்தவர்களாக
அவர்களும்
அலட்சியமாகவே
உடன் வாழ்ந்திருந்தார்கள்

இது நினைக்க ஒரு தருணம் - from இனியவள் சகாப்தம் (Diary)

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (25-May-23, 10:11 pm)
பார்வை : 75

மேலே