இன்னும் எத்தனை நாளைக்கு

பிறப்பிலும் இறப்பிலும்
இல்லை ஒரு வேறுபாடு.
வாழும் வாழ்வில்
மட்டும் ஏனிந்த கோட்பாடு?
கடவுள் அவன்
படைப்பில் ஏனிந்த பாகுபாடு?
கடவுளைச் சொல்லி
குற்றமில்லை.
படைப்பது அவன் தொழில்.
தேவையான அனைத்தும்
படைத்துவிட்டான்.
காப்பது அவன் தொழில்.
தீயவைகளிலிருந்து
அவனே காத்தும் நின்றான்.
அழிப்பதும் அவன் செயல்.
எல்லைமீறும்போது
அழிப்பவற்றை அழித்தும் விட்டான்.
அவனோடு மல்லு கட்டி
ஆகப்போவது ஒன்றுமில்லை.
அவனை கல்லாய் சமைத்துவிட்டு
மனம் கல்லாய்ப்போன
மனிதா...! எல்லாம் நீ செய்யும்
செப்பிடு வித்தை.
அவனவன் சொல்வது அவனவனுக்கு
வேதம். - இந்த
வேறுபாடு...
கோட்பாடு...
பாகுபாடு...
எல்லாம் உன் பிழைப்புக்காய்
உன் பாதுகாப்புக்காய்
நீயே போட்டுக்கொண்ட
ஒரு பாதுகாப்பு வளையம்.
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்
இன்னும் எத்தனை நாளைக்கு?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-May-23, 9:13 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 91

மேலே