தமிழேத் தெரியான் எழுதும் உளறல்

நேரிசை வெண்பாக்கள்

கண்ணாபின் னாவென்று காதல் தெரிவிக்க
கண்ணா எழுத்தில் கதைப்பை - கணக்காயர்
திண்மையாய் சொல்லத் திருந்திடு நுண்மையாம்
நண்பு வளர்த்தெதையும் நாடு

ஆண்டிகள் தங்க அமைத்தனர் சத்திரம்
ஈண்டு இணைவிழைச்சு ஈண்டுகிறார் -- மாண்டோர்
புகழ்நிலைக்க வெண்ணயாம் பூரியர் வந்து
இகழும் எழுத்தில் இணைந்து

குறள் வெண்பா

காய்விளமா காணாக் கசடன் மமதையில்
பாய்ந்திடும் மூதேவிப் பார்


எழுத்துப் பிழைகள் எழுத்தில் மலமாம்
கழுதையிடம் கற்பூரங் காட்டு




கண்ணா பின்னா வென்று காதலை எழுதவா எழுத்துத் தளம் அமைத்தார். எதையும் நூலாசிரியரிடம் கற்றுத்தேர்ந்து திருந்தி
பிறரை நட்புடன் அணுகி எழுத்தில் வளர்ந்திடு

ஒரு ஆண்டி மடத்தைக் கட்டிவைத்தால் சாமியார்கள் வந்துத் தங்க நல்லது. அந்த இடத்தில் தன் இணைகளைக் கூட்டி வந்து வெட்ட வெளியில் புணர்ச்சி செய்வேன் என்று பலர் முன்னிலையில் நிர்வாண மாக்கி புணர்தலுக்கு ஒப்புமைக்காண். நம்.. முன்னோர் தமிழ் வளர்த்த புகழை பரப்ப எண்ணி தளத்தை உபயோகம் செய்யாது இழுக்காய் எழுதுவராம், எழுதப் படிக்கத் தெரியாத அறிவீலியின் எழுத்தும், பாட்டும் ,கவிதையும் இத்தளத்தில்..மனித நரகலுக்கு ஒப்பாகும். அப்படி மலம் கழிப்பவனை
அடித்து விரட்ட வேண்டும்.... கழுதைக்கு தெரியுமா கற்பூரம் வாசம் ?...

எழுதியவர் : பழனி ராஜன் (26-May-23, 4:46 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே