சாதி மதமும் வேண்டா வேறுபேர்

அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா


பெற்றோர் வைத்த பேரை மறைத்து
சாதி மதமும் வேண்டா வேறுபேர்
சூடி என்ன வெல்லாம் எழுதி
நாட்டின் வரலாற் றையே மறைத்தாய்
முன்நூற் றாண்டாய் யேசு பேசி
ஏசி அழித்தாய் இந்து மதத்தை
இந்தியத் தமிழா ஏனாம் இப்படி
துரோகம் செய்தனை சிவத்தை நீயுமே
பழித்தனை நரகில் நீயும்
வீழ்வனை நரியாய் பிறப்பனை வீணே


.....

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-23, 11:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 15

சிறந்த கவிதைகள்

மேலே