குளிர் காய்கிறேன் உன்னை அள்ளியே
"குளிர் காய்கிறேன் உன்னை அள்ளியே
உன் தோள் சாய்கிறேன் என்னைத் தாங்கவே
என் மடி மீது உறங்கினாய் என் தாலாட்டிலே
நான் முதலில் உறங்கினேன் உன் மழலைப் பாட்டிலே
என் ஆயிரம் முத்தத்தில் நீ நனைகிறாய்
உன் சரீரம் தீண்டவே நான் மலர்கிறேன்
உன் சிறுநடை காணவே நான் கருவிழி ஆகிறேன்
உன்னை கருப்பையில் சுமந்ததால் நானும் குழந்தை ஆகிறேன்
உன் கைகளில் என் கண்ணீரின் சுவாசம்
என் கை விரல்களில் உன் கைகளை ஏந்தியே
என் பின்னால் நீ மறைகிறாய்
உன்னுள் நான் கரைகிறேன்
நான் போகிறேன் ஊர்கோலமே என்றும் கார்காலமே அதில் புதுவெள்ளமே
மறவாதே கலங்காதே அட அத்தனையும் பாராமுகமே
மணல் மணலாய் உடைகிறேன்
அனல் அனலாய் தகிக்கிறேன்
துளி துளியாய் நனைகிறேன்
என் உயிர்ஜீவன் இன்று சிவமாகுமே
என் உடலெல்லாம் சவமானதே"