அம்மா..//

பெற்றவளுக்கு நீயும்
ஒரு பிள்ளை
அவ்வளவுதான்..//

ஆனால் உனக்கு
அவள் மிகப்பெரிய
தெய்வம்..//

நீபோனால் அவளுக்கு
வேறொரு பிள்ளை
உண்டு..//

அவள் போனால்
உனக்கு வேறு
ஒருதாய் உண்டா..//

ஈறைந்து திங்கள்
கண்ணும் கருத்துமாய்
உன்னை சுமந்தவள்..//

உன்முகம் காண
என்னென்ன கனவு
கண்டாளோ..//

அவள் ஆசையும்
அன்பையும் எப்படி
விவரிக்க..//

அம்மா உன்னை
பற்றி சொல்லவா
எடுத்தால் உலகில்
வார்த்தைகள்தான் ஏது..//

எழுதியவர் : (20-May-23, 6:42 am)
பார்வை : 71

மேலே