அம்மா
அம்மா
××××××
வித்தாக கருவாக வயிற்றில் உருவாக்கியே
பத்து திங்கள் பக்குவமாக சுமந்தவளே
முத்தாக சிசுவை மண்ணில் ஈன்றவளே
சொத்தாக எண்ணியே சொர்க்கத்தங்கமென கொஞ்சியவளே
அற்புதம் படைக்கும் அதிசயம் நீதானம்மா
ஆற்றுதலில் நிலமவள் ஆலமர விழுதானவளே
பற்றுதலால் உப்பாக பாதியுடல் கரைந்தவளே
ஏற்றிவிட்டு உயர்வாக்கி ஏணியாக வீழ்பவளே
சூல் கொடுத்த சுடர்க்கொடி தாயவாள்
நீள் விசும்பாக நீள அருளுவாள்
பிள்ளைப் பேறில் பிறவி எடுத்தே
மீள் (மறுபடியும்) பிறந்த மீண்ட இன்பமே
தோள்மீது சேலையால் தொட்டில் கட்டி
கேள்வி ஞானத்தால் கன்னித்தமிழில் தாலட்டுவாள்
உள்முக சிந்தனையால் உறவுகளை சொல்லிசைப்பாள்
நள்ளி வள்ளலாக நன்மைகள் செய்தவளே
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்