அவள் ஒரு முடிவில்லா பயணம் -10

பாரதி பாரதி கதிர் பக்கத்தில் வருகிறாள் கதிர் பாரதி என்னை மன்னித்துவிடு கார்த்திகா இறந்தது என்னால் தாங்க முடியவில்லை அவளை நான் எவ்வளவு காதலித்தேன் தெரியுமா அவள் படும் துன்பத்திற்கு நானும் தானே காரணம் அவளை நான் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் எங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் அவள் இந்த உலகத்தை விட்டுப் போக காரணம் நான் தானே அவள் தந்தையை மீறி அவள் என்னோடு வந்திருந்தால் நான் அவளை வாழ வைத்திருப்பேன் நானும் என் குடும்பத்தை என் அம்மா அப்பாவை விட்டு அவளைத் தேடிப் போயிருந்தால் நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்போம் நானும் என் அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்டு அவளை விட்டு விட்டேன் அதனால் தான் அவள் இன்று இந்த உலகில் இல்லை அவள் இறந்ததால் எனக்கும் வாழ பிடிக்கவில்லை நானும் விஷத்தை குடித்து விட்டேன் என கதிர் சொல்ல பாரதி ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறாள் என்ன ஏன் இப்படி செஞ்சீங்க அப்ப நீங்க என்னை நினைக்கவில்லை யா நான் உங்க வாழ்க்கை இல்லையா உங்களை நம்பி தானே நான் வந்தேன் நீங்க நல்லவரு நீங்க என்ன பாத்துக்குவீங்க ஆனா நீங்க இப்படி செஞ்சீங்கன்னா நான் எப்படி வாழ்றது அப்ப என் வாழ்க்கை என்ன ஆகிறது என கேட்கிறாள் நான் செஞ்சது தப்புதான் நான் ஒருவன் என்னால் இரு பெண்களின் வாழ்க்கை கெட்டுவிட்டது அதற்கு காரணம் நான் ஆகிவிட்டேன் என்னை மன்னித்துவிடு பாரதி என்னை மன்னித்துவிடு நான் வாழ தகுதி இல்லாதவன் இனி நான் வாழ கூடாது என அழுக்கிறான் ஆமா நீங்க வேலைக்கு போரேன் என்று தானே போனீங்க ஆனா இப்படி பண்ணி இருக்கீங்க என கேட்கிறாள் இதற்கு எல்லாம் பதில் என் நம் ரூமில் இருக்கும் ஒரு டைரியில் இருக்கிறது அதை எடுத்து படித்து உனக்கே தெரியும் என சொல்லிவிட்டு என்னை மன்னித்துவிடு இந்த குழந்தையை எனக்கோசம் நீ வளர்க்க வேண்டும் இந்த ஒரு உதவி நீ செய்ய வேண்டும் இதை கார்த்திகாவின் கணவனோ அல்லது அப்பா அம்மாவோ யார் வந்து கேட்டாலும் தயவு செய்து கொடுத்து விடாதே எனக்கோசம் நீ ஒரு சத்தியம் செய்ய வேண்டும் இந்த குழந்தையை நீயே வளப்பேன் என்று என அவன் கேட்க பாரதியும் சரி என சத்தியம் செய்து கொடுக்கிறாள் சத்தியம் வாங்கிக் கொண்டு என்னை மன்னித்து விடு என பாரதியின் கால்களை பிடித்து அப்படியே தன் உயிரை விட்டு விடுகிறான் கதிரும் அழகான காதலாக இருந்தது என்று அடையாளம் இல்லாமல் போனது வாழத் தொடங்குவதற்கு முன்பே முடிந்து விட்டது அப்படியே பாரதி உக்காந்து விடுகிறாள் கண்களில் தண்ணீர் மட்டும் வருகிறது என்ன செய்வது என தெரியவில்லை யாரிடம் சொல்வது எனக்கு புரியவில்லை அவ்வளவு தானா வாழ்க்கை எனை யோசிக்கிறாள் அவள் யோசிக்கும் சமயத்தில் குழந்தை அழுகிறது குழந்தையை திரும்பிப் பார்க்கிறாள் பேசாமலே இருந்தவர் பேசினார் என சந்தோசப்பட்டேன் ஆனால் அதற்கு காரணம் எவ்வளவு பெரியது என புரிந்து கொண்டேன் நீ யார் என்று தெரியவில்லை உனக்கும் எனக்கும் என்ன உறவு எனப் புரியவில்லை ஆனால் இன்று முதல் நீ எனக்கானவள் நான் உனக்கானவள் என குழந்தையை தூக்கிக் கொண்டு பாரதி சொல்கிறாள் அவன் இறந்து விட்டான் கதிர் தன் பெற்றோர்களுக்கும் தன் மாமனார் மாமியார் இடமும் என எல்லோரிடமும் சொல்கிறாள் எல்லோரும் வருகின்றனர் பன்னையாருக்கு மகளின் வாழ்வில் இப்படியா என இடி விழுந்தது போல் ஆகிவிட்டது மிகவும் வேதனையில் மனிதன் மிகவும் துடித்து விடுகிறார் நம் மகளை நாமே இப்படி செய்து விட்டோமே என நினைக்கிறாள் வந்து எல்லாம் செய்து முடித்த பின் பாரதியை பண்ணையார் கூப்பிடுகிறார் வா பாரதி வந்துவிடு என்னோடு நம் ஊரிலே இருக்கலாம் நீ படிக்க வேண்டும் நினைத்தாலும் நான் படிக்க வைக்கிறேன் நீ ஆசைப்படுவது எல்லாம் நான் செய்கிறேன் இந்த குழந்தை எல்லாம் நமக்கு வேண்டாம் யாரோ பெற்ற குழந்தை எவனுக்கோ பிறந்தது நீ ஏன் வளர்க்க வேண்டும் அவன் தான் ஒரு துரோகி அவன் சாகும்போது சொன்ன வார்த்தை கோசம் நீ இந்த குழந்தையை வளர்க்க வேண்டுமா வேண்டாம் இந்த குழந்தை எல்லாம் நமக்கு என பண்ணையார் சொல்கிறார் அதே போல் மாமனார் மாமியாரும் ஆமாம் பாரதி குழந்தை நமக்கு வேண்டாம் நீ எங்களோடும் வந்துவிடு அவன் போனால் போகட்டும் வாழத் தெரியாதவன் அவன் வாழ தகுதியே இல்லாதவன் வாழ வந்த பெண்ணை வாழ வைக்காமல் எவளுக்கோ சாவதற்கு இவன் செத்துப் போய்விட்டான் அதனால் இனி அவன் என் மகனும் இல்லை நீ மட்டும் தான் என் மகன் என்னோடு வந்துவிடு நாங்கள் உன்னை பார்த்துக்கொள்கிறோம் என சொல்ல பண்ணையாருக்கு கோபம் வந்து விடுகிறது வாயை மூடுங்கள் நீங்கள் எப்படிப்பட்ட துரோகி உங்கள் மகன் காதலித்து அவளை விட்ட பின் என் மகளை கல்யாணம் செய்து கொண்டு அவளோடு ஒரு வார்த்தை கூட பேசாமல் இவ்வளவு நாள் வாழ்க்கை நடத்திவிட்டு திரும்ப அந்த பழைய காதலி வந்தது ஆனால் அவர் ஞாபகம் எனக்கு வந்து விட்டது அவளுக்கு கோசவே நான் இன்று விஷம் குடித்து செத்துப் போகிறேன் ஆனால் அவள் குழந்தையை நீ பார்த்துக் கொள்ள வேண்டும் அவன் மட்டும் இருந்தால் அவனை கொன்றே விடுவேன் அதற்கு முன்னாடியே அவன் போய் விட்டான் என பண்ணையார் கோபப்படுகிறார் இருவரும் மாறி மாறி பேசி கொள்கின்றனர் பாரதி எதுவும் பேசவில்லை குழந்தை உள்ளே தொட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது ரவி அட்ரஸ் கண்டுபிடித்து என் குழந்தை இங்கு தான் இருக்கிறது என போலீஸுடன் வருகிறான் வந்து போலீஸ்காரர்கள் உள்ளே வந்து யாருமா இங்க இருக்கிறது இங்க ஒரு குழந்தை இருக்கு அது ரெண்டு நாளைக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பொண்ணு செத்துருச்சு அந்த பொண்ணு அவர் முன்னாள் காதலன் கிட்ட கொடுத்துச்சு அவன் எடுத்துக்கிட்டு தான் வந்தான் என்று எங்களுக்கு தகவல் வந்துச்சு அதான் அந்த குழந்தையை அவங்க அப்பா கிட்ட ஒப்படைக்கலாம் என்று நாங்க வந்து இருக்கோம் என போலீஸ்காரர்கள் கேட்கிறார்கள் அதற்கு எல்லோரும் ஆமாம் இங்கதான் இருக்கிறது இருங்கள் கொண்டு வந்து தருகிறோம் என சொல்கிறார்கள் அமைதியாக இருந்த பாரதி குழந்தையை தூக்கிக் கொண்டு தன் மாமியார் வருவதை பார்த்துவிட்டு நில்லுங்கள் என சொல்கிறாள் என்ன ஆச்சு என அவள் மாமியார் கேட்க அத்தை ஒரு நிமிடம் இருங்கள் குழந்தையை கொடுங்கள் எனக்கு குழந்தையை வாங்கிக் கொள்கிறாள் வாங்கிக் கொண்டு அவளே வந்து என்ன சார் உங்களுக்கு பிரச்சனை என்ன வேண்டும் சொல்லுங்கள் என கேட்கிறாள் நான் தான் ரவி இது என் குழந்தை என் குழந்தையை என்கிட்ட கொடுத்துடுங்க என ரவி சொல்ல அதற்கு பாரதி சந்தேகப்பட்டு உன் மனைவியை கொன்றது போதாது இனி குழந்தையையும் கொள்ள வேண்டும் என வந்திருக்கிறாயா? உன்னிடம் என் குழந்தையை கொடுக்க முடியாது அது உன் குழந்தை அல்ல சரியா நீ சந்தேகப்பட்டது போல் அது என் கணவருக்கும் உன் மனைவிக்கும் பிறந்ததாகவே இருக்கட்டும் அதை கேட்ட பண்ணையார் பூங்கொடி மாமனார் மாமியார் எல்லோருக்கும் கோபம் வருகிறது பண்ணையார் பாரதி என்ன பேசுற ஒழுங்கா அவங்க கிட்ட குழந்தையை கொடுத்துவிடு என்று உனக்கு வேணாம் நீ என்கூட வா வந்து நம்ம ஊர்ல இரு எதற்கு இந்த குழந்தையை நீ வளர்க்க வேண்டும் என நினைக்கிறாய் உனக்கு என்ன தலை எழுத்த என பண்ணையார் கேட்கிறார் அப்பா இது என் வாழ்க்கை என்னை வாழ விடுங்க சரியா உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தரேன்னு சொல்லி செஞ்ச வரைக்கும் போதும் இதுக்கு மேல நானே வாழ்ந்து பார்க்கிறேன் என்னதான் நடக்குதுன்னு என பாரதி பேசுகிறார் போலீஸ்காரர் என்னம்மா என்ன பேசுறீங்க அவர் குழந்தையை வைத்துக்கொண்டு உங்கள் குழந்தை என்று சொல்றீங்களா என போலீஸ்காரர் கேட்க ஒரு நிமிடம் இருங்கள் என கார்த்திகா கதிரிடம் கொடுத்த கடிதம் பாரதியிடம் கொண்டுவந்து கொடுத்த கடிதம் அந்த கடிதத்தில் நான் சுயநினைவு உடன் எழுதுவது என் குழந்தை நான் யாரிடம் ஒப்படைக்கிறேனோ அவரிடம் தான் வளர வேண்டும் என் கணவரிடமோ அல்லது என் கணவர் வீடாரிடமோ இல்லை என் பெற்றோர்களிடமோ இது வளரக்கூடாது நான் யாரிடம் கொடுக்கிறேன் என எனக்கு தெரியவில்லை ஆனால் நான் கொடுப்பவர் மிகவும் நல்லவர் அவர்தான் இந்த குழந்தையை வளர்க்க வேண்டும் நான் என் நண்பன் கதிரிடம் தர வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் அது நடக்குமா என எனக்கு தெரியவில்லை அப்படி நடந்தால் நான் என்னை விட பாக்கியசாலி யாரும் இல்லை அவன் நன்றாக வளர்ப்பான் இந்த குழந்தையை அவரிடம் இருந்து பறித்து என் கணவரிடம் கொடுக்கக் கூடாது என நான் நான் சுயநினைவுடன் எழுதிக் கொடுப்பது என் குழந்தை நான் ஒப்படைப்பவர்களிடமே வளர வேண்டும் அப்பொழுதுதான் அவள் நன்றாக வளருவாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பார்கள் இப்படிக்கு கார்த்திகா என எழுதி அந்த கடிதத்தை தான் கார்த்திகா கதிரிடம் கொடுக்க கதிர் கொண்டு வந்து பாரதியிடம் கொடுக்க பாரதியாரை படித்து பார்த்து விடுகிறாள் இனி இந்த குழந்தையை நாம் தான் வளர்க்கப் போகிறேன் இது இன்று முதல் என் குழந்தை என எல்லோரும் முன்னாடியும் சொல்கிறாள் எல்லோருக்கும் அதிர்ச்சியாகிறது என்ன பேசுகிறாய் உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது இது மட்டும் உன் வாழ்க்கை இல்லை என சொல்கிறாள் பூங்கொடி அம்மா நீ எதுவும் பேசாதே பேசிய வரைக்கும் போதும் என சொல்லுகிறாள் இது என் குழந்தை அவர் என்னை நம்பி ஒப்படைத்தது நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் தயவுசெய்து யாரும் என்னை தொல்லை செய்யாதீர்கள் என சொல்லவும் இதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை என கதிரின் அம்மா அப்பா கிளம்பி போய் விடுகிறார்கள் நான் மட்டும் என்ன செய்வது இந்த குழந்தை வேண்டாம் நீ மட்டும் வருவதாக இருந்தால் வா இல்லை என்றால் வேண்டாம் என பண்ணையாரும் பூங்கொடியும் இருவரும் கிளம்பி போய் விடுகின்றனர் பாரதியும் குழந்தையும் மட்டும் வீட்டில் இருக்கின்றனர் என்னடா வாழ்க்கை இவ்வளவுதானா என பாரதி நினைக்கிறாள் யாருமே நமக்கு உதவிக்கு இல்லையே அவ்வளவு பெரிய தவறு நாம் எதுவும் செய்யவில்லை நல்லது என நினைத்தாலும் அது இப்படி முடியுமா என பாரதி தனக்குள்ளே பேசிக் கொள்கிறாள் எல்லோரும் கிளம்பி போய் விடுகின்றனர் பாரதியும் குழந்தையும் மட்டும் தான் வீட்டில் இருக்கின்றனர் கதிர் எழுதிய டைரியை பாரதி படித்துப் பார்க்கிறாள் கதிரை பற்றி எல்லாம் பாரதிக்கு தெரிகிறது கதிர் எந்த தவறும் செய்யவில்லை கதிர் மிகவும் நல்லவன் பாரதியின் பிறந்தநாளுக்கு அவன் வாங்கி வைத்தது அவள் மீது அவனுக்கு வந்த காதல் என எல்லாமே எழுதி வைத்திருக்கிறான் நான் ஏன் கார்த்திகாவை சந்தித்தேன் எனக்கு இருந்த வேலையை நான் விட்டு விட்டு விட்டேன் வேலை இல்லாமல் பஸ் ஸ்டாண்டிலே தான் கார்த்திகாவுக்கு கோசம் காத்திருந்தேன் அதனாலயே எனக்கு வேலை போய்விட்டது வேலை எனக்கு இல்லை என எல்லாமே எழுதி வைத்திருந்தான் அதை எல்லாம் படித்துவிட்டு பாரதி சரி இதற்கு மேல் என்ன செய்வது நாம் தான் இனி வாழ வேண்டும் என யோசிக்கிறாள் யோசித்து விட்டு என்ன செய்வது எனப் புரியாமல் நிற்கிறாள் இங்கு வாழ வேண்டும் என்றால் குழந்தை வீடு என எல்லாமும் நான் தான் பார்க்க முதலில் வாழ்வதற்கு பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என முடிவு செய்கிறாள் இருக்கும் வீட்டிற்கு வாடகை தர வேண்டும் வேறு எங்கேயாவது போக நமக்கு வீடு கிடைக்க வேண்டும் குழந்தையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு நாம் முதலில் ஒரு வேலைக்கு போக வேண்டும் என முடிவு செய்கிறாள் சரி என இப்படியே ஒரு இரண்டு மூன்று நாட்கள் ஒரு பத்து நாளை போகிறது பின் இதற்கு மேலும் வீட்டில் இருந்தால் நமக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள் என யோசித்து விட்டு இவளும் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர்கள் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி அந்த பாட்டி மிகவும் நல்ல பாட்டி அந்த பாட்டியிடம் பாரதி குழந்தையை கொடுத்துவிட்டு வேலையை தேடி போகிறாள் ஆனால் இவர் கல்லூரி படிப்பை கதிர் வாங்கிக் கொடுத்த செல்போனில் தான் இவள் படிக்க ஆரம்பிக்கிறாள் தொலைதூரக் கல்வியில் என இவள் படிக்கிறாள் அந்த கல்வியில் இவள் பட்டம் பெற இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கிறது ஏனென்றால் அவள் இங்கு வந்து படிக்கும்போதே அந்தப் புத்தகத்தில் தொலைதூரக் கல்வியைப் பற்றி தெரிந்து தபால் வழியில் படிக்க ஆரம்பித்தவள் என் செல்போன் வாங்கித் தரவும் கல்யாணமாகி எவ்வளவு நாளும் அவள் கதிரிடம் கூட சொல்லாமல் தொலைதூரக் கல்வியில் கதிர் கொடுக்கும் பணத்தை வைத்து பட்டப்படிப்பை முடிக்க நினைக்கிறாள் அவள் இப்பொழுது பட்டம் பெரும் தருணம் தான் அதைக் கூட அவர் கதிரிடம் சொல்லவில்லை ஏனென்றால் பட்டம் பெற்ற பின் சொல்லலாம் என நினைக்கிறாள் ஆனால் அதற்குள் இப்பொழுது கதிரே இல்லை வேலைக்கு போக வேண்டும் வேலையை எப்படியாவது தேட வேண்டும் என தேடி போகிறாள் எங்கும் தேடியும் வேலை கிடைக்கவில்லை கிடைக்காமல் மிகுந்த சோர்வு உடன் வீட்டுக்கு வருகிறார் பக்கத்து வீட்டு பாட்டி என்னம்மா வேலை கிடைத்ததா எங்க இல்ல பாட்டி யாரும் தர மாட்டேங்குகிறார்கள் என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை என சொல்கிறாள் சரிமா என குழந்தையை கொடுக்க தூக்கிக் கொண்டு வருகிறாள் பாரதி குழந்தை இடம் மிகுந்த அன்பு வைக்கிறாள் முதலில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என யோசிக்கிறாள் யோசித்து பெண் குழந்தை அதனால் இனி நீ தான் என் வாழ்க்கைக்கு முக்கியம் லட்சியம் அதனால் இன்று முதல் என் கண்ணின் இமைப்போல் நீ இருப்பதால் உனக்கு நான் கண்மணி என பெயர் வைக்கிறேன் குழந்தையும் சிரிக்கிறது அப்ப உனக்கு இந்த பெயர் பிடித்திருக்கிறது தானே அம்மா வைத்த பெயர் என அம்மா என சொல்ல ஆரம்பிக்கிறாள் பாரதி குழந்தையும் சிரிக்கிறது இப்படியே கண்மணி கண்மணி என பாசத்தை அள்ளி வீசுகிறாள் அவ்வளவு குழந்தை மீது பாசம் வைக்கிறார் குழந்தையும் அவளிடம் அவ்வளவு பாசமாக இருக்கிறது கார்த்திகாவை குழந்தை மறந்தே விட்டது ஏனென்றால் சிறு குழந்தை என்பதால் கார்த்திகாவின் ஞாபகம் இல்லை அப்பா என்று ரவியின் நினைவு எதுவுமே குழந்தைக்கு இல்லை அம்மா என்றால் பாரதி என்ற நினைவு மட்டும் தான் இருக்கிறது குழந்தைக்கு இப்படியே பாரதி வேலைக்கு தேடி தேடி செல்ல பாரதிக்கும் வறுமை என்ற ஒன்று வந்து விடுகிறது பணம் மாதம் ஆனால் வந்துவிடும் அவன் குடிக்க ஆரம்பித்து சரியாக வேலைக்குப் போகாத சமயத்தில் மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது ஆனால் இப்பொழுது வேலையும் இல்லை எதுவும் இல்லை அவனும் இல்லை என்பதால் அவளுக்கு சாப்பாட்டுக்கு கூட கையில் பணம் இல்லை அப்பா பண்ணையார் தான் ஆனால் அவரிடம் போய் உதவி கேட்க முடியுமா பணம் வேண்டும் என கேட்டால் அவள் தருவாரா அப்படி கேட்டு வாழக்கூடாது என முடிவு செய்கிறாள் இப்படியே அவள் தினமும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறாள் என்ன நாம் கூட பசியை பொறுத்துக் கொள்ளலாம் குழந்தைக்கு பால் வாங்கியாவது கொடுக்க வேண்டுமே அதற்கு பணம் என்ன செய்வது என நினைத்து லேசாக கண் கலங்குகிறாள் அந்த சமயத்தில் பக்கத்து வீட்டு பாட்டிநீ கவலைப்படாத பாரதி உனக்கு நான் இருக்க சரியா நீ என் பேத்தி மாதிரி என சொல்லிவிட்டு பாட்டி குழந்தைக்கு பால் காய்ந்து கொண்டு வந்து கொடுக்கிறார் அதை பார்த்த பாரதிக்கு பேச வாய் வரவில்லை என்ன சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை குழந்தைக்கு பால் குடிக்க வைக்கிறாள் .


தொடரும்...

எழுதியவர் : தாரா (28-May-23, 12:57 am)
சேர்த்தது : Thara
பார்வை : 257

மேலே