தமிழ் மொழியின் பரிமாணங்கள்

தொல்காப்பியத்தின் குழந்தையாய்
அகத்திய முனிவரின் தவப்புதல்வியாய்
மூவேந்தர்களின் கொஞ்சும் குமரியாய்

கம்பரின் செல்லப்பிள்ளையாய்
பாரதியாரின் அன்னையாய்
பாவேந்தரின் உயிராய்

பல மொழிகளின் ஆசானாய்
வெளிநாட்டாரை ஈர்க்கும் வரவேற்பாளனாய்
பல நாட்டின் ஆட்சிமொழியாய்

காலங்களை வென்ற போர்வீரனாய்
வாழ்நெறி வழிகாட்டியாய்
மனித குல பண்பாட்டின் அடித்தளமாய்

இந்திய திருநாட்டின் செம்மொழியாய்
தமிழர்களின் அடையாளமாய் விளங்கும்

ஈடில்லா நம் தாய்மொழியான
தமிழ்மொழியைப் போற்றுவோம்!!
தலை வணங்குவோம் !!

எழுதியவர் : கா.யஜ்னேஷ் (6-Jun-23, 5:17 pm)
சேர்த்தது : Yajnesh
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே