அப்பா

அப்பா
××××××
கருணை காட்டிட
கணிக்கை வாங்காத
அருமை தெயவம் - வரங்களை
அள்ளித்தரும் அப்பா..

தேரேறி வலம்வரும் தெய்வமில்லை
தோள்மீது என்னை சுமந்து
ஊரெல்லாம் சுற்றி வரும்
உதயசூரியன் அப்பா....

பட்டு வஸ்திரம் அணிந்து
படையல் கேட்கும் குலசாமியில்லை
உடுத்த துணி அறியாதிருந்தும்
வியர்வையை நூலக்கி
தேய்ந்த கால்களை சூவாக்கி - நான்
அணிந்திடப் மூலப்பொருள் அப்பா..

செல்வங்களை சேர்க்கவில்லை - பணம்
சேமிப்பில் இருந்ததில்லை - தமிழரின்
நாகரீக பண்பாட்டில் என்னை
வளர்க்க தவறியதில்லை அப்பா...

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 7:44 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : appa
பார்வை : 59

மேலே