கோயில் கும்பாபி சேகம்
வெண்பா
காவிரி ஆழியெனக் காடு செழித்திடும்
வாவிநிறை சோழ வளநாடு -- காவில்
கருவைக் குளத்தூரின் காவல் கடவுள்
உருவாம் வடமலையான் போற்று (காப்புச் செய்யுள்)
நூற்று இருப தாண்டும் முன்னே
கருவேலங் குளத்தூர் பக்தர் வேலுவும்
பெரிய தம்பி கோனார் சேர்ந்தே
போனார் ஏழுமலை பெருமாள் கும்பிட
பொடிநடை என்றாலும் முன்நூற் மைலாம்
அங்கே சாமியின் தரிசனம் மகிழ்ச்சி
பக்தர்கள் இருவரும் வடமலைக் கென்று
உடனே தமது ஊரில் கோயில்
உயர்த்த வேண்டுதல் செய்து திரும்பினர்
உடனொரு மனிதர் முன்பின் பார்த்திரா
தவரும் கூடவே ஊர்வரை வந்து
கோயில் விழாவில் நானும் கூட
தவறா திருப்பேன் என்று மறைந்தாராம்
அவரே வடலையான் அவர்தான்
அங்கு உறைகிறார் என்பதை தீகமே
...

