இறைமாட்சி யிருந்தாலே ஈடேறும் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
அறிவின்மை விளங்கிடவே ஆங்காங்கே
..ஓர்பிதற்றல் ஐயோ பாவம்;
அறிவீனன் எனச்சொல்ல அதுசாட்சி
..அறிந்திடுவீர் அதுவே துன்பம்!
செறிவூட்டுங் கருத்துக்கள் இல்லையெனில்
..சிக்கல்தான் சிந்தை கொள்வீர்;
இறைமாட்சி யிருந்தாலே எண்ணமெல்லாம்
..ஈடேறும் இனிதே சொல்வேன்!
- வ.க.கன்னியப்பன்
’அ’ வுக்கு மோனை அ ஆ ஐ ஔ ஆகும்.
’செ’ க்கு மோனை சி சீ செ சே ஆகும்.
’இ’ க்கு மோனை இ ஈ எ ஏ நான்கும் ஆகும்.