பாடலுக்கு அழுகு சேர்ப்பது எது

தமிழ் வணக்கம்
××××××××××××××

காற்றுடன் தமிழ்
கலந்திடும் இசையால்
காதுகள் கேட்டிடும்
கானங்கள் இனித்திடும்
உருவற்ற காற்றை
இசையாக உருவாக்கும்
தமிழுக்கு முதல் வணக்கம்

தலைமை வணக்கம்
××××××××××××××××××

கவியரங்கத் தலைமை கவிஞர் மயிலையூர் மோகன் அவர்களுக்கு தலைமை வணக்கம்

அவை வணக்கம்
×××××××××××××××

பாடலுக்கு வரிகள் தந்து
பாக்களை பூக்களாக கோர்த்திடும்
கவிஞர் பெருமக்களுக்கு அவை வணக்கம்

பாடலுக்கு அழுகு சேர்ப்பது எது
××××××××××××××××××××××

துணைத் தலைப்பு
×××××××××××××××××

வரிகள்
×××××××

பாடலுக்கு அழுகு சேர்ப்பது வரிகள்
வரிகள் இல்லையெனில்
வார்த்தைகள் இல்லையெனில்
பாடலாக உருப்பெருமோ

வரிகள் இல்லாமல்
வார்க்க முடியாது இசையை
வார்த்தைகள் இல்லாத
வாத்திய இசைகள்
காதுகளுக்கு எட்டாமல்
காற்றோடு கலந்து
காணாமல் சென்றிடும்

வரிகளின் அழகில்
வார்த்தைகள் கோர்ப்பில்
எதுகையும் மோனையுமாக
பூவாக தொடுத்து
இசையெனும் நாரில்
இணைக்க மனந்திடும்
பூவில் கலந்த நாரும்
அதுபோல்
இசைத்திடும் பாடலும்
இசையை இனிமையாக்கும் ..

வெறும் இசையால்
வேறுபட்ட மக்களை
ஒன்று படுத்த
இயலாது

சமூக விழிப்புணர்வு
பெண்களின் சுதந்திரம்
நாட்டின் சுதந்திரம்
வன்கொடுமை
பெண் கொடுமை
மூடநம்பிக்கை

இவையெல்லாம் வெறும்
இசையால் கூறிட
இயலாது

வரிகள் கலந்த
வாக்கிய இசையால்
நல்வழி தெரியாத
மூடர்களை நல்வழிப்படுத்தும்..

பாடலுக்கு அழுகு சேர்த்து
பாடல் கேட்பவர்களை நல்வழிப்படுத்துவது

கவிஞர்களின் பாடல் வரிகளே! வரிகளே !!

எனக் கூறி உரையை முடிக்கிறேன்

நன்றி நவிலல்
+++++++++++++

கவியரங்கில் கவிதை படைத்து தமிழ் வரிகளுக்கு சிறப்பு செய்திட வாய்ப்புகள் தந்த கவிஞர் பெருமக்களுக்கு நன்றி ...

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Jun-23, 6:24 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 24

மேலே