மதிமுகங் கொண்ட பெண்ணாள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
மதிமுகங் கொண்ட பெண்ணாள்
..மகிழ்வொடு மனத்தில் வைத்தேன்;
எதிர்மொழி பேசா நல்லாள்
..இனிமையாங் குணமுங் கொண்டாள்!
மதிலரண் வேண்டேன் யாண்டும்
..மனந்தனில் உறுதி வேண்டும்;
புதுமையாள் அவளைக் கண்டேன்
..போற்றியே வாழ்வேன் நானே!
- வ.க.கன்னியப்பன்