சங்கத்தமிழ்
சங்கத்தமிழ்
==========
சங்கநூல் பலவுண்டு
சங்கிலியாகப் பிணைப்புண்டு
சங்கங்கள் மூன்றுயுண்டு
சங்கமித்தே வளர்ந்ததுயுண்டு
மங்கா பாவடித்து
மயிலிறகு மைதொட்டு
ஓங்கியோர் ந்தபனை
ஓலையில் எழுதியே
தங்கமாகச் சேமித்து
தகரப்பெட்டி னுள்பூட்டிட்ட
பொங்குதமிழ் கடலாக
பொங்கி வெளியேறியே
அங்கமெலாம் அறமனக்க
அகிலமெங்கும் மனமனக்க
பாங்காய் அமர்ந்தாள்
படிப்போர் உள்ளத்திலே
ஆங்கிலமெனும் மொழியொன்று
ஆங்காரமாக தமிழுனுள்
பங்கிட்டப் போதிலும்
பலியாகயென் சங்கத்தமிழே
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்