சுருங்கியது சுற்றமும் நொறுங்கியது சொந்தமுமே
சுருங்கியது சுற்றமும்
நொறுங்கியது சொந்தமுமே
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
விரல்நுனி உரசிட
வையகம் கைப்பேசியில்/
ஈரமற்ற நெஞ்சங்களால்
இன்றில்லை நேசமே/
கணினித்திரை முகமே
கண்டு பேசினோம்/
மணித்துளியில் வந்திறங்கும்
மகத்தான வசதியிருந்துமே/
கருசுமந்த தாய்க்கும்
காணொளியில் இறுதிச்சடங்கு/
உருகியே வளர்த்தவளுக்கு
உருக்கம் இதுதானோ/
வனத்தில் குரங்காக
வாழ்ந்தோம் கூடியே/
பணத்தாசை மனிதனானோம்
பாசமற்றுத் தனிமையானமோ/
அருவறுப்பு பேராசை
அந்நியநாடு பிரவேசத்தால்/
சுருங்கியது சுற்றமும்
நொறுங்கியது சொந்தமுமே/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்