அம்மாவை போற்றுவோம்

அம்மாவை போற்றுவோம்

அம்மா என்ற அழகிய ஒரு சொல்லில்
அடங்கியதாம் இணையற்ற அன்பும் பாசமும்
அமுதளித்து அறிவூட்டிய அச் சொல்லும்
அகமகிழ்ந்து அவள் கொடுத்த கருணையும்
ஆசையோடு அவள் பேணிவளர்த்த மேனியும்
இறுதிவரை காதில் ஒலிக்கும் இனிய தாலாட்டும்
ஈசன் இம்மண்ணில் பிறந்ததை நினைவூட்டிடும்
உயிரினும் மேலான அந்த அன்பு பெட்டகத்தை
ஊண் உறக்கமின்றி எம்மை காத்த அந்த உயிரை
எந்நாளும் மறக்க முடியுமோ இப்பாரினில் உள்ளவரை
ஏற்றங்கள் வந்த பொழுது ஈன்றவளை மறந்தவர்களை
ஒரு நாளும் இறை மன்னிக்க மாட்டான் என்ற உண்மையை
ஓ மானிடனே நீ உணர்ந்து என்றும் அவளை காத்திடுவாய்.

எழுதியவர் : கே என் ராம் (14-Jun-23, 3:52 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : ammavai pootruvom
பார்வை : 24

மேலே