பாமணி ஐயாவிற்கும் நன்றி
சக்கரை வாசன் அவரகள் ஒரு குறள் வெண்பா எழுதி அது யாப்பில்
எத்தனை விழுக்காடு தேறும் என்று யிந்த
முறை சரியாய் அமைந்துள்ளதா ?என்று ஐயப்பாட்டுடன் எழுதி யிருந்தார்
அவருடைய குறள் வெண்பா கீழேத் தரப்பட்டுள்ளது காண்க
சொல்லுங் கவிதையும் சோராதி ருந்திட
நல்லதாம் யாப்பது நாடு!
இலக்கணப்படி சரியென்று பாராட்டிய Dr பாவலர் பாமணி கன்னியப்பன்
அவர்கள் அக் குறள் சிறக்க ஒரே திருத்தம் செய்துள்ளார் அதுவும் கீழேத்
தரப்பட்டுள்ளது
சொல்லுங் கவிதையும் சோரா திருந்திட
நல்லதாம் யாப்பது நாடு!
நல்ல தொருக் குறள் வெண்பாவை எழுதிய சக்கரை வாசன் அவர்களைப் பாராட்ட
வேண்டும் என்று நானும் பாராட்டியுள்ளேன் பாருங்கள்
நூறுசதம் தந்தேன் நுமது குறளுக்கு
பேறாமேல் போக்கவிஞா.போம்
நன்றி பாமணி ஐயாவிற்கும் நன்றி