தந்தையர் தினம்
தந்தையர் தினம்
தந்தையின் அன்பிற்கு தன்னிகர் இல்லை
தகிக்கும் வெயிலை ஒத்து கோபமுற்றாலும்
தண்ணீரை போல் குளிர்ந்து ஓடி மறைந்தாலும்
தனது சொல்லில் அவர் கூறும் அறிவுரைகள்
தனது அன்பை என்றும் காட்டிடும் சொற்களே
தனது குழந்தை நலனே எதிலும் பிரதிபலிக்க
தன் கோபம் மகிழ்ச்சி அவர் கவலையின் உணர்ச்சியே
தனது கடமை காப்பதென சிறந்த நண்பனாக நின்று
தன்னிடம் எவ்வேளையிலும் அடைக்கலம் கொள்ள
தனி வழி அமைத்து நம் ஆசைகளை நிறைவேற்றும் உறவு
தம் உயிராக நம்மை வைத்து அடல் காக்கும் உன்னதம்
தவறாமல் அன்னாரை இந்நன்னாளில் நினைத்து வணங்கி
தரணியில் என்னென்றும் அவர் நலமுடன் வாழ வழி செய்வோம்