ஆத்திக்குறள்
அடிமைத் தளையை உடைத்து,சகாநீயும் ஆகாயம் தாண்டிப் பற.
இல்லை எனநீ நுவலாமல் ஏழைக்கு ஈந்தால் நலமே உனக்கு.
உலகில் அருங்கொடை கானலாய் ஆனாலும்
ஊட்டி விடுநிறைய அன்பு.
என்றைக்கும் எப்போதும் எங்கேயும் யாரையும்
ஏமாற்றிச் சேர்க்காதே காசு.
ஐபோனோ ஆண்ட்ராய்டோ நாளை எதிரியோடு
ஒன்றாக நீஎடுப்பாய் செல்பி.
ஓயாது வேலையைச் செய்;பசித்த பின்பேஉண்
ஒளடதம் தேவை இல.
கஃறென்ற என்மனம் நீவந்த பின்னால்தான்
வெஃகியதே வாழ்க்கையை மெல்ல.