சொற்றுணை யாவர் சொல்லுவேன் நிசமே = நேரிசை ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா
(1, 3 சீர்களில் மோனை)
கற்றிடல் நலமே கற்றிடல் நலமே
கன்னித் தமிழைக் கற்றிடல் நலமே;
பெற்றிடல் பெருமை பேணுவர் நமையே;
சொற்றிட மறிந்து சொல்லுவீர் இனிதே;
கற்றவ ரனைவரும் கனிவுடன்
சொற்றுணை யாவர் சொல்லுவேன் நிசமே!
- வ.க.கன்னியப்பன்