தமிழே திகட்டாத அமிழ்தே
பொதிகையின் புதல்வியே
பொருநனின் தமக்கையே/
ஆதியும் முடிவுமாக
ஆதிக்கம் கொண்டவளே/
முற்சங்க மதுரையிலே
முப்பால் நூலாகி/
பிற்பகுதிக் கவிஞர்களின்
பாக்களாக மலருபவளே/
ஓலைச் சுவடியில்
ஒய்யாரமாக பதிந்தவளே/
கலையில் கலந்து
கலசமாக உயர்ந்தவளே/
கல்வெட்டில் உருவெடுத்து
கணினியில் அமர்ந்தவளே-நீ/
இல்லாத இடமும்
இம்மியும் உண்டோ/
வின்னிலும் செவ்வாயிலும்
விரைவில் கால்பதிப்பவளே/
தேன்சுவை தமிழே
திகட்டாத அமிழ்தே/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்