இதயம் பேசுகிறது
இதயம் பேசுகிறது
================
கண்கள் போரிட
காமங்கள் வழிந்தோட/
மண்ணில் புதியதாக
மலரும் காதலொன்று/
உடலுக்குள் உணர்வுகள்
உலா வந்திடவே/
தடங்களாக மறந்தேன்
தனது நினைவுகளை/
உதடுகள் சிரித்திட
உடம்பும் சிலிர்க்க/
சேதராம் ஆகுதடி
ஆதராம் நீதானடி/
கையசைவு வளையோசை
கைப்பிடிக்க அழைப்பினும்/
வாயசைவுக்கு காத்திருக்கேன்
வாசற்படி செருப்பாக/
இமைக்கும் விழிகள்
இணைக்கும் தொடர்பால்/
இமையசை மெளனத்தோடு
இதயதம் பேசுகிறது/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்