கற்றிடுவோம் சுமையின்றி
கற்றிடுவோம் சுமையின்றி
€€€€€€€€€€€€€€€€€€€€€€
சுமையாகும் புத்தகங்கள்
சுகமானது அறிவூட்டிட /
பாடநூல்களை சுமையாக
பாவித்தல் தேவையற்றது/
வண்டி கட்டி
இழுக்கும் பாரமாக /
வாண்டுகளுக்கு கடினமாக்குவது
வியாபாரக் கல்வியே /
ஆங்கில மோகத்தில்
அடிபணிந்து அடிமையாகி/
கற்றலுடன் சுமையால்
கூனலும் வீழுகிறது/
கல்வியை இனித்திடும்
கற்கண்டாக தேனாக /
சுவையுடன் ஊட்டுங்கள்
சுமைகள் இன்றி /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்