உணவுக்கு ஏது
உணவுக்கு ஏது..
××××××××××××××
ஆண் : ரெட்டை சடை போட்டுக்கிட்டு
மிதிவண்டியில போர புள்ள
பட்டணந்தான் போயி புள்ள -நீ
படிச்சு என்ன கிழிக்கப்போர..நீ என்ன கிழிக்ப் போர....
பெண் : ரெட்டை மாட்டை பூட்டிக்கிட்டு
மாட்டு வண்டியில் போர மச்சான்
மேல் படிப்பை படிச்சு போட்டு
மேலநாடு போயி கோடிக்காசு சேர்க்கப்போரேன்...மச்சான்
உழுதும் நீ என்ன உயரப் போர
வழியைக் கொஞ்சம் விடுங்க மச்சான்..
ஆண் : பசிக்கு உணவு பணமாகுமா புள்ள
காசை விதைத்த அரிசியாகுமா புள்ள - உன்
விழியைக் கொஞ்சம் திறந்திடு புள்ள
பெண் : துட்டுயிருந்த தட்டுல சோறு மச்சான்
சேற்றுல காலை வைத்த
சவதிதான் ஒட்டும் மச்சான்
காந்தி நோட்டு ஒட்டிடாது மச்சான்
ஆண் : சோற்றைப் பணத்தைப் போல அச்சடிக்க முடியுமா புள்ள
வாகனத்தைப் போல ஆலையில் தயரிக்க இயலுமா புள்ள
பட்டத்தை தூக்கிப் போட்டு
பாட்டாளிய வா புள்ள..
பசுமை புரட்சி புள்ள
பெண் : விவசாயத்தின் அருமையை
விவரமாக தெரிஞ்சுக்கிட்டேன்
என் ஆச மச்சான்..மச்சான்..
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்