சிறை அதை உடை

சிறை அதை உடை
£££££££££££££££

மாஞ்சோலைக் கிளியாக
மாங்கனி உண்டு/
சுதந்திரக் காற்றை
சுவாசித்து வாழ்ந்தோம்/

மனிதன் கண்பட்டு
மணிக் கூண்டில் /
அடைபட்டுக் கைதிகளாக
அடிமையாக இருக்கின்றோம்/

கொஞ்சிப் பேசிடவும்
கிளி சோதிடம்/
கூறிடவும் கயவர்கள்
கைப் பாவையாகிறோம் /

சிறை மீண்டு
கிளை செல்ல /
முயல்கிறோம் வளர்ப்பவர்கள்
பாசத்தால் சிறையிருக்கிறோம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Jun-23, 6:14 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : sirai athai udai
பார்வை : 47

மேலே