ஊடகம்

ஊடகம்
++++++

தேசநலம் தொலைத்து
தேடுகிறப் பணத்தால்/
நாசமாகிப் போகிறாது
நான்கம் தூணுமே/

தன்னலம் சாதியம்
தலைதூக்க தலைகீழாக/
நன்னலம் கெட்டு
நாளேடும் நாறுகிறதே/

கொலை கொள்ளை
தலையங்கச் செய்தியிட/
வலையிட்ட மீனாக
வாசகரும் தவிக்கின்றனரே/

அறப்பாதை வழிகாட்டி
அறிவுக்கு உரமாகி/
புறமெங்கும் படிப்போர்
புகழுர வாழ்ந்திடவே/

காகித அச்சில்
கண்ணியம் வேண்டும்/
ஊகித்தலின்றியே உண்மையால்
ஊடகப்பணி சிறக்கட்டுமே/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Jun-23, 6:08 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 38

மேலே