நினைவுக் குதிரை

நினைவுக் குதிரை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நினைவுக் குதிரை
நீண்டவால் குதிரை /
நாட்கள் கடந்தாலும்
நினைவுகள் மறையவில்லை/2

கல்லூரிக் காலத்தில்
கன்னியவள் கண்பட்டாள் /
காந்தமாகக் கவர்ந்து
கருவிழியில் பதிந்தால்/4

காலமும் கடந்தது
காதலும் வளர்ந்தது /
திருட்டுக் காதல்
தெரிந்தது வீட்டுக்கு/6

பேரிடியாக விழுந்து
பெற்றோரின் கதறலில் /
காதலுக்கு எதிர்ப்பு
காரணம் சாதி /8

தீண்டியக் காதல்
தீண்டாமையால் அழிந்தது /
அன்பில் வளர்ந்தது
அடிமைத்தனத்தால் நொடிந்தது / 12

சத்ரியர் சூத்திரர்
சதிச் செயலால்/
சவப் பெட்டிக்குள்
சமாதியானது காதல்/14

எத்தனையோக் காதலர்
இக்கதி அடைந்தனரோ /
இன்னிலை யாவருக்கும்
இனிமேல் வரவேண்டாம் /16

தீப்பெட்டிக் கண்ணில்
தென்பட்டால் நினைவில்/
வந்து செல்லும்
அவள் பெயர் /18

மறக்கத்தான் நினைக்கிறேன்
மறையவில்லை நினைவலைகள் /
நினைக்கத்தான் முடியும்
இனியவளை காதலிக்க முடியாது/20

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Jun-23, 6:10 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : ninaivuk kuthirai
பார்வை : 67

மேலே