பழுத்தப் பழம் கல்லடி படும்

நேரிசை வெண்பா

எழுதும் வசன எழுத்ததும் நன்குப்
பழுத்தக் கனிப்பாயென் பார்பார்- அழுகுங்
கனிவா சமுமுணருங் காண்நாசி நீத்தள்
ளினியும் தொடராதே யிங்கு


பேசு நடையில் சொல்வதெல்லாம் பேச்சே ஆகும். கவிதையல்ல.
தமிழன் திரு வள்ளுவன் ஒன்றே முக்கால் வரியில் ஏழு சொற்களில்
வெண்பா என்ற இனத்தில் ஆயிரத்து முந்நூற் று முப்பது குறள்களை
தேர்ந்து செய்துள்ளார், குறள் வெண்பா கற்பது மிக எளிது. முயற்சி
செய்து, கற்றெழுதிப் பச்சைத் தமிழனென்று நிரூபியுங்கள் தமிழரே



....

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jun-23, 6:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே